ADDED : செப் 25, 2011 09:58 PM
விருதுநகர்:விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆற்று பாலத்தில், ஆடு, மாடு,
பன்றிகள் வளர்ப்பதற்காக, தி.மு.க., கவுன்சிலர் பவுன்ராஜ்,தண்ணீர் செல்லும்
பாதையை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார்.விருதுநகர் கவுசிகா ஆற்றில்
ஏற்கனவே பலர் ஆக்கிரமித்து சிறுசிறு பாலங்களை அமைத்துள்ளனர். இதனால்
ஆற்றில் தண்ணீர் தேங்கி, மழைகாலங்களில் பாத்திமா நகர் பகுதி தண்ணீரில்
மூழ்கும் நிலை உள்ளது.இந்நிலையில், விருதுநகர் நகராட்சி தி.மு.க.,
கவுன்சிலர் பவுன்ராஜ், விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே செல்லும்
ஆற்றுபாலத்தில் மண் கொட்டி ஆடு, மாடு, பன்றிகள் வளர்ப்பதற்காக தண்ணீர்
செல்லும் பாதையை ஆக்கிரமித்து மேடாக்கியுள்ளார்.
மேலும், இப்பகுதியில் யாரும் புகுந்துவிடாமல் இருக்க, கம்புகளால் வேலியும்
அமைத்துள்ளார். மழைகாலம் தொடங்கிவிட்டதால், ஆற்றில் தண்ணீர் அதிகம் வர
வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நலன்கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.