ஜெகன் சொத்து வழக்கு: 28 கம்பெனிகளிடம் விசாரணை
ஜெகன் சொத்து வழக்கு: 28 கம்பெனிகளிடம் விசாரணை
ஜெகன் சொத்து வழக்கு: 28 கம்பெனிகளிடம் விசாரணை
ADDED : ஜூலை 30, 2011 02:06 AM
ஐதராபாத்: ஆந்திராவில் கடப்பா எம்.பி.
ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்டில் தொடரப்பட்ட வழக்கில், 28 கம்பெனிகளின் பிரதிநிதிகளிடம் சி.பி.ஐ. நேற்று விசாரணை நடத்தியது. ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர் ஐகோர்டில் தாக்கல் செய்த மனுவில் , ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தந்தை ராஜசேர ரெட்டியின் ஆட்சியின் போது , சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளார். இது குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. தனது முதற்கட்ட அறிக்கையினை கடந்த 26-ம் தேதி தாக்கல் செய்தது. இந்நிலையில் நேற்று ஜெகன்மோகன் முதலீடு செய்யததாக கருதப்படும் 28 கம்பெனிகளின் பிரதிநிதிகளுடன் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் காலஅவகாசம் கேட்டிருந்தது. அதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் -1-ம் தேதி) இறுதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.