/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரேஷனில் தடையின்றி பொருட்கள் வினியோகம் செய்ய அரசு உத்தரவுரேஷனில் தடையின்றி பொருட்கள் வினியோகம் செய்ய அரசு உத்தரவு
ரேஷனில் தடையின்றி பொருட்கள் வினியோகம் செய்ய அரசு உத்தரவு
ரேஷனில் தடையின்றி பொருட்கள் வினியோகம் செய்ய அரசு உத்தரவு
ரேஷனில் தடையின்றி பொருட்கள் வினியோகம் செய்ய அரசு உத்தரவு
ADDED : செப் 07, 2011 10:43 PM
சிவகங்கை : ''கடைக்கு வரும் கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல், பொருட்களை வினியோகம் செய்யவேண்டும்,'' என விற்பனையாளர்களுக்கு அரசு கடும் உத்தரவிட்டுள்ளது.பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பச்சை கார்டுகளுக்கு இலவச அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது.இது தவிர அன்னயோஜனா திட்டத்தில், 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.அலைக்கழிப்பு: அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாகவும், எடை குறைவின்றி வழங்குமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைகளில் பெரும்பாலும், அரிசி எடை குறைவாகவும், 20 ம்தேதிக்கு மேல் உளுந்து, துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை இருப்பு இல்லை என கார்டுதாரர்களை திருப்பி அனுப்புகின்றனர்.உத்தரவு: இதையடுத்து, மாதம் முழுவதும் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்களுக்கு சப்ளைசெய்யவேண்டும். பொருட்களை தரமானதாக இருக்கிறதா என சரிபார்த்தபின்பே அனுப்பவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வழங்கல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'' விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் ரேஷனில் பொருள் வினியோகிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. குடோனில் இருந்து வரும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மோசமாக இருந்தால், உடனே திருப்பி அனுப்பவேண்டும் என உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.