மாடியில் இருந்து விழுந்த போலீஸ்காரர் மர்ம சாவு
மாடியில் இருந்து விழுந்த போலீஸ்காரர் மர்ம சாவு
மாடியில் இருந்து விழுந்த போலீஸ்காரர் மர்ம சாவு

ஈரோடு:ஈரோட்டில் காம்ப்ளக்ஸ் மாடியில் இருந்து கீழே விழந்த போலீஸ்காரர், மர்மமாக இறந்து கிடந்தார்.
ஈரோடு அருகே சென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் கார்த்திகேயன் (33).
சந்தேகம் அடைந்த லீலா, அவரது தந்தைக்கு தவகல் கொடுத்தார். நேற்று கார்த்திகேயன் தம்பி விஸ்வநாதன், அவரது மாமா பழனிசாமி ஆகியோர் பிரவின் காம்ப்ளக்ஸ் வந்து வாட்ச்மேனிடம் விசாரித்த போது, அவரது மொபைல் ஃபோன் மட்டும் இருந்ததாகவும், 2 நாட்களாக அவர் வரவில்லை, என்று தெரிவித்தார். அவர்கள் மாடியை சுற்றி பார்த்த போது, பிரவின் காம்ப்பளக்ஸ் அருகே உள்ள மாடியில் கார்த்திகேயன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.டவுன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.டவுன் இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடம் வந்து, கார்த்திகேயன் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். வாட்ச்மேன் மணியிடம், போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கார்த்திகேயனுக்கு குடி பழக்கம் உள்ளதால், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர்.