/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன் : கீழக்கரை 4வது வார்டு வேட்பாளர் வாக்குறுதிஅடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன் : கீழக்கரை 4வது வார்டு வேட்பாளர் வாக்குறுதி
அடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன் : கீழக்கரை 4வது வார்டு வேட்பாளர் வாக்குறுதி
அடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன் : கீழக்கரை 4வது வார்டு வேட்பாளர் வாக்குறுதி
அடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன் : கீழக்கரை 4வது வார்டு வேட்பாளர் வாக்குறுதி
ADDED : அக் 03, 2011 12:19 AM
கீழக்கரை : ''கீழக்கரை நான்காம் வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அயராது பாடுபடுவேன்'' என, சுயேட்சை வேட்பாளர் முகம்மது மரியம் கூறினார்.
கீழக்கரை நகராட்சி தேர்தல் உதவி அலுவலர் சுரேஷ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்த பின் கூறியதாவது: நான்காவது வார்டில் மக்களின் குறைகளை அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் எனது பணி விளங்கும்.
தரமான சாலை, பாதுகாக்கப்பட்ட குடி நீர்,தெருவிளக்கு போன்ற பணிகளில் தனிக்கவனம் செலுத்துவேன். இங்குள்ள குப்பைகளை நாள்தோறும் அகற்றவும்,பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தவும், மின் கம்பங்கள்,மின் வயர்கள் புதிதாக அமைக்கவும் குரல் கொடுப்பேன்.
மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து விரைவாக நிறைவேற்றுவேன். அரசின் சலுகைகளை கேட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்க முயற்சி மேற்கொள்வேன்.மக்கள் வாழ்த்தும் சிறந்த கவுன்சிலராக பணியாற்றுவேன்,என்றார்.
மூர் விளையாட்டுக் குழு தலைவர் ஹசனுதீன்,சமூக நல நுகர்வோர் அமைப்பு செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன்,சிறு தொழிலாளர் மீனவ சங்க தலைவர் நல்ல இபுறாகிம்,குலாம் தஸ்தக்கீர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


