வழிப்பறி வழக்கில் கைதான போஸ்ட்மேன் :வீட்டில் கட்டுக் கட்டாக தபால்கள்
வழிப்பறி வழக்கில் கைதான போஸ்ட்மேன் :வீட்டில் கட்டுக் கட்டாக தபால்கள்
வழிப்பறி வழக்கில் கைதான போஸ்ட்மேன் :வீட்டில் கட்டுக் கட்டாக தபால்கள்
ADDED : ஜூலை 23, 2011 12:14 AM

நாகர்கோவில் : வழிப்பறி வழக்கில் கைதான போஸ்ட்மேன் வீட்டில் இருந்து, மூட்டை மூட்டையாக தபால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் வடிவீஸ்வரம், இசங்கவிளை, பீச்ரோடு, செட்டிக்குளம் பகுதியில் தபால் வினியோகிக்கும் வேலை பார்த்து வந்தார்.
வழிப்பறி மற்றும் கத்திக்குத்து வழக்கில், கணேசனை கோட்டார் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை போஸ்டல் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அவர் தொடர்பாக விசாரணை நடத்திய போது, இவர் தபால்கள் சரியாக வினியோகம் செய்வது இல்லை என்ற தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் வடிவீஸ்வரம் கல்மாடத்தெருவில் உள்ள கணேசன் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டு மொட்டை மாடியில் இருந்த ஐந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது, ஹால் டிக்கெட்டுகள், பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்த விண்ணப்பங்கள், வெளிநாட்டுக் கடிதங்கள் என பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் அதில் இருந்தன. கடிதங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.