ADDED : செப் 04, 2011 01:21 AM
சென்னை: சமூக நல வாரியத் தலைவராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில், 'சமூக நல வாரியத் தலைவராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதியில் இருந்து, மூன்று ஆண்டுகள் வரை, இந்தப் பதவியில் தொடர்வார். வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் நியமனம் குறித்து தனியாக அறிவிக்கப்படும்' என்று, தெரிவித்துள்ளார்.