Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சந்தேகம் வந்தால் சொல்லத் தவறாதீங்க...

சந்தேகம் வந்தால் சொல்லத் தவறாதீங்க...

சந்தேகம் வந்தால் சொல்லத் தவறாதீங்க...

சந்தேகம் வந்தால் சொல்லத் தவறாதீங்க...

ADDED : ஆக 20, 2011 11:32 PM


Google News
பொள்ளாச்சி:'குடியிருப்பு பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.பொள்ளாச்சியில், போலீஸ் நண்பர்கள் குழு மற்றும் போலீசாருக்கான மல்டி மீடியா பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மாரியப்பன் தலைமை வகித்து பேசினார். பொள்ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜி, வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி, 'போலீஸ் நண்பர்கள்' செயல்பாடு குறித்து விளக்கினர்.போலீஸ் அதிகாரிகள் பேசியதாவது:பொதுமக்களும், போலீஸ் நண்பர்களும் ஒத்துழைப்பு கொடுத்தால், குற்றங்களையும், திருட்டு சம்பவங்களையும் தடுக்க முடியும். குடியிருப்பு பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளை வாடகைக்கு விடும் போது, குடிவருபவர்களின் விபரங்களை முழுமையாக விசாரித்து, போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அந்தந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மொபைல் எண்களை, வீடுகளில் எழுதி வைத்திருக்க வேண்டும். வெளியூர் செல்லும் போது, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இரவு ரோந்து செல்லும் போலீசார், பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணிக்க வசதியாக இருக்கும்.போலீஸ் நண்பர்கள், போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும். போலீஸ் நண்பர்கள் தனி நபராக இல்லாமல், நான்கு பேர் கூட்டாக சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் இரவு ரோந்து செல்லலாம். விபத்து நடந்தால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு ரோந்து செல்லும் போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவிடம் விசாரித்து வர வேண்டும். போலீசாருடன் கிடைக்கும் தொடர்பை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் பேசினர்.போலீஸ் நண்பர்கள் குழு எப்படி செயல்பட வேண்டும் என, படக்காட்சிகள், வீடியோ காட்சிகள் மூலம் காண்பிக்கப்பட்டது. போலீஸ் நண்பர்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us