/உள்ளூர் செய்திகள்/திருச்சி/போலீஸ் கமிஷனர் விளக்கம் வாழ்வில் உன்னத நிலை அடைவது எப்படி?போலீஸ் கமிஷனர் விளக்கம் வாழ்வில் உன்னத நிலை அடைவது எப்படி?
போலீஸ் கமிஷனர் விளக்கம் வாழ்வில் உன்னத நிலை அடைவது எப்படி?
போலீஸ் கமிஷனர் விளக்கம் வாழ்வில் உன்னத நிலை அடைவது எப்படி?
போலீஸ் கமிஷனர் விளக்கம் வாழ்வில் உன்னத நிலை அடைவது எப்படி?
ADDED : ஆக 19, 2011 11:06 PM
திருச்சி: திருச்சி கேம்பியன் பள்ளியில் கலச்சார போட்டிகள் மற்றும் மாவட்ட
அளவிலான போட்டிகள் அடங்கிய 'கேம்போபெஸ்-11' என்ற நிகழ்ச்சி நேற்று
துவங்கியது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள்
கலைநிகழ்ச்சிகளிலும், கேரம், கட்டுரை எழுதுதல், பேச்சுப்போட்டி, பாடுதல்,
இசைக்கருவிகள் வாசித்தல் ஆகிய போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர். மூன்று
நாள் நடக்கும் போட்டியின் துவக்கவிழா நேற்றுமுன்தினம் மாலை ஆறு மணிக்கு
பள்ளி வளாகத்தில் துவங்கியது. விழாவில், மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து,
பள்ளி முதல்வர் அருள், துணைமுதல்வர் ஜான் எட்வர்டு உள்ளிட்ட பள்ளியின்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். முதல் நிகழ்ச்சியாக பள்ளி
மாணவ, மாணவியர் பங்கேற்ற கிராம நடனப் போட்டி நடந்தது. இதில், பள்ளி மாணவ,
மாணவிகள் பல்வேறு வகையான நடனங்களை ஆடி பார்வையாளர்களை அசத்தினர்.
'கேம்போபெஸ்-11' போட்டியை துவக்கி வைத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்
மாசானமுத்து பேசியதாவது: ஒவ்வொரு மாணவரிடமும் ஒவ்வொரு சக்தி உள்ளது.
அதைக்கொண்டு நீங்கள் நினைக்கும் எதையும் சாதிக்க முடியும். இந்த உலகில்
கல்வி ஒன்றால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த மாற்றத்தை
படைக்கக்கூடிய சக்தி மாணவர்களிடம் உள்ளது. மாணவர்களின் சாதனைகளுக்கு
சொந்தக்காரர்கள் ஆசிரியர்கள். பெற்றோர், ஆசிரியர், நாடு, தாய்மொழியை
நேசித்தால் வாழ்வில் உன்னத நிலையை அடையலாம். தாய், தந்தை, ஆசிரியர் ஆகிய
மூவரும் நடமாடும் தெய்வங்கள். அவர்களை வணங்கவேண்டும். பெற்றோர் தங்கள்
பிள்ளைகளுக்கு கல்வி கற்க உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தரவேண்டும்.
ஆசிரியர்கள் தங்களின் பணியில், முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மாணவர்களின்
திறமைகளை வளர்க்க நல்ல கல்வியை வழங்கவேண்டும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.
ஆனால் விஞ்ஞானத்தால் ஒழுக்கத்தையும், அமைதியையும் கொடுக்க முடியாது.
அதையெல்லாம் மீறி நம் உள்ளத்தை ஆனந்தமாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


