Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்

ADDED : ஆக 13, 2011 01:06 AM


Google News
Latest Tamil News

சென்னை : சென்னை கோட்டையில் நடைபெறும், சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிக்காக, வாகன போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோட்டையில், சுதந்திர தின விழா வரும் ஆக., 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட ஒத்திகையை முன்னிட்டு, கோட்டை சுற்றுப்புறப் பகுதிகளில், காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து, சென்னை போக்குவரத்து போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேப்பியர் பாலத்திலிருந்து, போர் நினைவுச் சின்னம் வரையிலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து, இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



காமராஜர் சாலையிலிருந்து, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்தா சாலை வழியாக, அண்ணா சாலை, முத்துசாமி பாலம் வழியாக பாரிமுனைக்கு திருப்பி விடப்படுகிறது. அதேபோல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக, காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை வழியாக வந்து, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலை வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us