/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கினர்சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கினர்
சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கினர்
சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கினர்
சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கினர்
ADDED : ஆக 11, 2011 02:53 AM
புதுச்சேரி:சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை
வரவேற்று, பா.ம.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழகத்தில் சமச்சீர்
கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது.
இத் தீர்ப்பை வரவேற்று, பா.ம.க.,வினர், மாநில செயலாளர்
அனந்தராமன் தலைமையில் நேற்று பட்டாசு வெடித்தும், மக்களுக்கு லட்டு
வழங்கியும் கொண்டாடினர்.அண்ணா சாலை காமராஜர் சிலை சந்திப்பில் நடந்த
நிகழ்ச்சியில், ஆலோசகர் ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சுப்ரமணி,
செயலாளர்மதியழகன் உள்ளிட்டட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில
செயலாளர் அனந்தராமன் கூறுகையில், 'சமச்சீர் வழக்கில், ஏழை, பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என,
உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது'
என்றார்.சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்று இந்திய
மாணவர் சங்கத்தினர் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் பட்டாசு வெடித்து,
இனிப்பு வழங்கினர்.