/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்தூத்துக்குடியில் வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 09, 2011 12:54 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் வரும் 12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டு இயக்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் 249 தொழில் நிறுவனங்கள் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. போக்ஸ்கோன், ஈருக்காபார்பஸ் லிமிடெட், சுந்தரம் கிளைடன் லிமிடெட், மக்கிளிலியன் இண்டகிரேடட் சர்வீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து ஐடிஐ பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டயப்படிப்பு மற்றும் அனைத்து பட்டதாரிகள், பிற கல்வித்தகுதியுடையவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். வேலைநாடுபவர், வேலையளிப்போர் இருவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வேலைநாடும் இளைஞர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.