Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.60 கோடி மோசடி: நடிகைகள் நேஹா துபியா, பிபாஷா பாசுவுக்கு சிக்கல்!

ரூ.60 கோடி மோசடி: நடிகைகள் நேஹா துபியா, பிபாஷா பாசுவுக்கு சிக்கல்!

ரூ.60 கோடி மோசடி: நடிகைகள் நேஹா துபியா, பிபாஷா பாசுவுக்கு சிக்கல்!

ரூ.60 கோடி மோசடி: நடிகைகள் நேஹா துபியா, பிபாஷா பாசுவுக்கு சிக்கல்!

UPDATED : செப் 18, 2025 06:09 PMADDED : செப் 18, 2025 03:51 PM


Google News
Latest Tamil News
மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி மற்றும் தொழிலதிபர் கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்து நடிகைகள் நேஹா துபியா, பிபாஷா பாசுவை விசாரிக்க மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா, நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பிரபலங்களை அடிப்படையாகக் கொண்ட டெலிஷாப்பிங் சேனல் ஆகும்.

பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் தொடர்பான கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.60.4 கோடி மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, குந்த்ரா மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த மோசடி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவலுக்காக, மேலும் சில பாலிவுட் பிரபலங்களை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

இந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் பெற்ற பணம் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தயாரிப்பாளர் ஏக்தா கபூர், நடிகைகள் நேஹா துபியா, பாபாஷா பாசு ஆகியோரிடமிருந்து பெற முடிவு செய்துள்ளோம்.

நிறுவனத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக புகார் இருப்பதால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஆராயப்படுகிறது. ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதை ஆராய்வது இப்போது முக்கியம். ஆகவே பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதையும் நாங்கள் அவர்களிடம் கேட்போம். விரைவில் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படும்.

இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us