/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க கோரிக்கைவர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க கோரிக்கை
வர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க கோரிக்கை
வர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க கோரிக்கை
வர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க கோரிக்கை
ADDED : ஆக 03, 2011 01:29 AM
புதுச்சேரி : கடை மற்றும் வர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.ஐ.டி.யூ., செயலர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., போன்ற சட்டப்பூர்வமான பலன்களும், குறைந்தபட்ச கூலி, போனஸ், மருத்துவ வசதி வழங்கப்படுவதில்லை. வார விடுமுறை அளிக்கப்படாமல், ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை வாங்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் செய்யும் கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுவதில்லை.
கடை, வர்த்தக நிறுவன தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைக்கவும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அளிப்பதற்கு அரசும், தொழிலாளர் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.