/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"கலாச்சாரம் பண்பாடு காக்க இளைஞர் பாடுபட வேண்டும்'"கலாச்சாரம் பண்பாடு காக்க இளைஞர் பாடுபட வேண்டும்'
"கலாச்சாரம் பண்பாடு காக்க இளைஞர் பாடுபட வேண்டும்'
"கலாச்சாரம் பண்பாடு காக்க இளைஞர் பாடுபட வேண்டும்'
"கலாச்சாரம் பண்பாடு காக்க இளைஞர் பாடுபட வேண்டும்'
ADDED : ஆக 01, 2011 10:26 PM
பெ.நா.பாளையம் : நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் காக்க இன்றைய இளைஞர்கள் பாடுபட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தமிழக,கேரள, கர்நாடக பொறுப்பாளர் ஸ்தாணுமாலயன் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் குருபூஜை விழா பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்தது.
தடாகம் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். பிரஸ்காலனி ஸ்ரீ வாராஹி மந்த்ராலயம் மணிகண்ட சுவாமி ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக, கேரள, கர்நாடக பொறுப்பாளர் ஸ்தாணுமாலயன் பேசுகையில்,'' இன்றைய இளைஞர்கள் அர்ப்பணிப்பு, தேசபக்தியுடன் செயல்பட வேண்டும். நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்லும் ஊழலை ஒழிக்க அணி திரள வேண்டும். இதிகாசங்கள் காட்டும் சத்திய வாழ்க்கையை வாழ வேண்டும்'' என்றார்.ஏற்பாடுகளை கோவை வடக்கு தாலுகா ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் பழனிச்சாமி செய்திருந்தார்.