/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு துறையில் டிரைவர் வேலை அமைச்சரிடம் இளம்பெண் மனுஅரசு துறையில் டிரைவர் வேலை அமைச்சரிடம் இளம்பெண் மனு
அரசு துறையில் டிரைவர் வேலை அமைச்சரிடம் இளம்பெண் மனு
அரசு துறையில் டிரைவர் வேலை அமைச்சரிடம் இளம்பெண் மனு
அரசு துறையில் டிரைவர் வேலை அமைச்சரிடம் இளம்பெண் மனு
ADDED : ஆக 11, 2011 02:51 AM
புதுச்சேரி:அரசுத் துறையில் டிரைவர் வேலை கோரி போக்குவரத்து துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் இளம் பெண் மனு அளித்தார்.
புதுச்சேரி கேண்டீன் வீதியைச் சேர்ந்தவர் சசிபிரபா. புதுச்சேரியில் முதல்
முறையாக பெண்களும் கனரக வாகனம் ஓட்ட முடியும் என பஸ், கிரேன் உள்ளிட்ட
வாகனங்களை சசிபிரபாக ஓட்டி அசத்தினார்.தற்போது அவர் அரசு துறையில் டிரைவர்
வேலை வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம்
கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவின் விபரம் வருமாறு:மகளிருக்கு முன்னுரிமை
கொடுக்கும் வகையில் எனக்கு அரசு போக்குவரத்து கழகத்திலோ, அரசு கல்வி
நிறுவனத்திலோ பஸ் ஓட்ட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதன் மூலம் இத்துறையில்
பெண்கள் காலடி எடுத்து வைக்க தூண்டுகோலாக இருக்கும்.இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.