தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?
தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?
தலாய்லாமாவுக்கு காந்தி அமைதி விருது விசா வழங்குமா தென் ஆப்ரிக்கா?

ஜோகன்னஸ்பர்க் : 'புத்த மதத் தலைவர் தலாய்லாமாவுக்கு, மகாத்மா காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னாப்ரிக்க அரசு, அவருக்கு விசா வழங்க வேண்டும்' என, காந்தியின் பேத்தி எலா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
டர்பன் நகரில், இம்மாதம் 9ம் தேதி நடக்க உள்ள விழாவில், தலாய்லாமாவுக்கு அவ்விருது வழங்கப்படுகிறது. தென்னாப்ரிக்கா உடனான வர்த்தகத்தில், சீனா முக்கிய இடம் வகிக்கிறது. அதனால், தலாய்லாமாவுக்கு விசா வழங்குவதில், தென்னாப்ரிக்க அரசு தாமதம் செய்து வருகிறது. விருது வழங்குவதற்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், துணை அதிபர் கலீமா, தலாய்லாமாவின் விசா இன்னும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, 'தலாய்லாமாவுக்கு விசா வழங்க, உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர், ஆன்மீகத் தலைவராகத் தான் இருந்து வந்துள்ளார். அதனால், அவருக்கு விசா வழங்குவதில், எவ்விதப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் வராதபட்சத்தில், அவரது பிரதிநிதியிடம் விருது வழங்கப்படும்' என, எலா காந்தி கோரியுள்ளார்.


