/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்புகடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு
ADDED : ஆக 25, 2011 02:04 AM
புதுச்சேரி : 'கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் கூறினார்.
முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்பு: பொதுப் பணித் துறைக்கு நடப்பு நிதியாண்டில் 624 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊசுட்டேரி தண்ணீரை சுத்திகரித்து, நகரப்பகுதிக்கு வழங்கும் திட்டம் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும். புதுச்சேரியில் கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் நிறுவ தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் திட்டம், காரைக்காலிலும் மேற்கொள்ளப்படும்.
கடலூர் புறவழிச் சாலை, அரும்பார்த்தபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
குமாரமங்கலத்தில் மலட்டாற்றின் குறுக்கே மதகுடன் கூடிய பாலம், கைக்கிளப்பட்டு, திருக்காஞ்சி ஆகிய இடங்களில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அரும்பாõர்த்தபுரம் தக்ககுட்டையிலிருந்து அரியாங்குப்பம் டோல்கேட் வரை பாப்பாஞ்சாவடி வழியாக புறவழிச்சாலை அமைக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உப்பனாற்றின் மீது மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவக்கப்படும். உப்பனாற்றின் குறுக்கே உப்பளத்தில் புதிய பாலம் கட்டப்படும். தென்பெண்ணையாற்றின் குறுக்கே மணமேட்டில் பாலம் ஒன்று கட்டப்படும். சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டும் பணி, காமராஜர் மணிமண்டப கட்டுமானப் பணி துவக்கப்படும். காலாப்பட்டு சிறைச்சாலை கட்டடத்தின் 2ம் கட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி கோர்ட் வளாகத்தின் 2ம் கட்டடப் பணி, புதிய நீதிமன்ற வளாகத்தில் சமரசத் தீர்வு மையம், இலவச சட்ட உதவி மையம் உள்ளடக்கிய பொது வசதிகள் கொண்ட கட்டட வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நீதிபதிகளுக்கு லாஸ்பேட்டையில் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். சங்கராபரணி ஆற்றில் மூன்று, குடுவையாற்றில் ஒன்று, மலட்டாற்றில் மூன்று, முள்ளோடை கால்வாயில் மூன்று என மொத்தம் 10 படுகை அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


