/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 225 பாங்குகள் மூடல் 2,500 ஊழியர்கள் ஸ்டிரைக்நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 225 பாங்குகள் மூடல் 2,500 ஊழியர்கள் ஸ்டிரைக்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 225 பாங்குகள் மூடல் 2,500 ஊழியர்கள் ஸ்டிரைக்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 225 பாங்குகள் மூடல் 2,500 ஊழியர்கள் ஸ்டிரைக்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 225 பாங்குகள் மூடல் 2,500 ஊழியர்கள் ஸ்டிரைக்
ADDED : ஆக 06, 2011 01:55 AM
திருநெல்வேலி : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 20 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2,500 பாங்க் அதிகாரிகள், ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
அனைத்து பாங்குகளும் மூடப்பட்டதால் 800 கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.பொதுத்துறை பாங்குகளை தனியார்மயமாக்குவதை கைவிடுவது, பொதுத்துறை பாங்குகளை பிற பாங்குகளுடன் இணைக்கக்கூடாது, பாங்க் பணிகளை வெளியாட்களுக்கு வழங்குவதை நிறுத்துவது, பாங்குகளில் 1 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பி.எஸ்.ஆர்.பி., மூலம் பாங்க் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாங்க் ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் குதித்துள்ளது.இதன் ஒருபகுதியாக நேற்று நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு 4 அதிகாரிகள் சங்கங்கள், 5 ஊழியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. 10 லட்சம் பாங்க் அதிகாரிகள், ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பொதுத்துறை, தனியார் பாங்குகள் மூடப்பட்டன. பாங்க் பரிவர்த்தனைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.2,500 அலுவலர்கள்நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட பாங்குகளின் 225 கிளைகளில் பணியாற்றும் சுமார் 2,500 அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபடுபட்டனர். அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பாங்குகள் திறக்கப்படவில்லை. அனைத்து பாங்குகளும் மூடப்பட்டிருந்தன. திறக்கப்பட்ட சில பாங்க் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பாங்கிற்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.நெல்லை ஸ்ரீபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு பாங்க் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாங்க் அதிகாரிகள் கூட்டமைப்பு மாவட்டச்செயலாளர் ஸ்டாலின், பாங்க் ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் ரெங்கன், பாங்க் அதிகாரிகள் சங்க மாவட்டச்செயலாளர் முருகன், தேசிய பாங்க் ஊழியர் கூட்டமைப்பு மாவட்டச்செயலாளர் எட்வின், பாங்க் ஊழியர் சம்மேளன மாவட்டச்செயலாளர் முத்தையா உட்பட பலர் பேசினர். பாங்க் அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஸ்டிரைக் முழு வெற்றி பாங்க் ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் ரெங்கன் கூறும்போது, ''நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் முழுமையாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட பாங்குகளும் மூடப்பட்டன. ஸ்டிரைக் முழு வெற்றி அடைந்துள்ளது. இரு மாவட்டங்களிலும் சுமார் 800 கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை பின்னர் தெரிவிக்கப்படும்'' என்றார்.