/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்
அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்
அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்
அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்
ADDED : ஆக 26, 2011 12:09 AM
கூடலூர் : காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நடுவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கூடலூர் நடுவட்டத்தில் மனித உரிமை கழகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு, மனித உரிமைகள் கழக நடுவட்டம் பகுதி செயலர் நாகராஜ் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க செயலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுந்தது. இதில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், ஸ்ரீனி, எல்.பி.எப்., நிர்வாகி ஏகாம்பரம், மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் முருகன், சரவணன், பன்னீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோத்தகிரி: அன்னா ஹசாரே நடத்தி வரும் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோத்தகிரியில் 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நான்கு கிராம அமைப்பு தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். இதில், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் பெள்ளி, நாக்குபெட்டா இளைஞர் பேரவை தலைவர் அகஸ்தியமணி, காத்துக்குளி கிராம பிரமுகர் போஜன், இருப்புக்கல் ஜோகி, புதுமந்து இரியன் மற்றும் கவுன்சிலர் சகுந்தலாராமு உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.


