Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இந்தியா - பாக்., அமைச்சர்கள் பேச்சு : பாகிஸ்தான் மீடியாக்கள் வரவேற்பு

இந்தியா - பாக்., அமைச்சர்கள் பேச்சு : பாகிஸ்தான் மீடியாக்கள் வரவேற்பு

இந்தியா - பாக்., அமைச்சர்கள் பேச்சு : பாகிஸ்தான் மீடியாக்கள் வரவேற்பு

இந்தியா - பாக்., அமைச்சர்கள் பேச்சு : பாகிஸ்தான் மீடியாக்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 28, 2011 09:37 PM


Google News
Latest Tamil News

இஸ்லாமாபாத் : இந்தியா - பாக்., வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையை, பாகிஸ்தான் மீடியாக்கள் வரவேற்றுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, நேற்று முன்தினம், இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். காஷ்மீர் விவகாரம், எல்லைப் பிரச்னை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் குறித்த அம்சங்கள், பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன. குறிப்பாக, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது, பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நடந்த இந்த பேச்சு வார்த்தையை, பாகிஸ்தான் மீடியாக்கள், 'ஒருங்கிணைந்த செயல்பாடுகளில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது' என, வரவேற்றுள்ளன.

'டெய்லி டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட தலைப்புச் செய்தியில்,'புதிய அத்தியாயம் துவங்குவதற்கு, இந்தியா - பாக்., உறுதி. உறவு மீண்டும் புதுப்பிப்பு' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல், டான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உருது பத்திரிகைகளும், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையோன பேச்சு வார்த்தையை, வெகுவாக பாராட்டி, செய்தி வெளியிட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us