Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டோணாவூரில் பஸ் மீது கல்வீச்சு : இருவர் கைது

டோணாவூரில் பஸ் மீது கல்வீச்சு : இருவர் கைது

டோணாவூரில் பஸ் மீது கல்வீச்சு : இருவர் கைது

டோணாவூரில் பஸ் மீது கல்வீச்சு : இருவர் கைது

ADDED : ஆக 15, 2011 01:30 AM


Google News

ஏர்வாடி : டோணாவூரில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவிலில் இருந்து பாபநாசத்திற்கு அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு டோணாவூர் வழியாக சென்றது.

அப்போது டோணாவூர் உவாக்கர் மேல்நிலைப்பள்ளி அருகே இரண்டு பேர் பஸ்சை நிறுத்த கைகாட்டியுள்ளனர். பஸ் நிறுத்தமில்லாத இடத்தில் கை காட்டியதால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கற்களை எடுத்து பஸ்சின் பின்புற கண்ணாடி மீது எறிந்து உடைத்துவிட்டு ஓடிவிட்டனர்.இச்சம்பவம் குறித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி டோணாவூர் காருண்யா தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் தனபாலன் (26), தங்கபாண்டி மகன் ராமகிருஷ்ணன் (எ) பெரியசாமி (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us