வேலூர் மாவட்டத்தில் மூன்று விபத்துக்களில் 4 பேர் பரிதாப பலி
வேலூர் மாவட்டத்தில் மூன்று விபத்துக்களில் 4 பேர் பரிதாப பலி
வேலூர் மாவட்டத்தில் மூன்று விபத்துக்களில் 4 பேர் பரிதாப பலி
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த, 3 விபத்தில், 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
* நாட்றாம்பள்ளியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (27). இவரது நண்பர் விஜயன் (31). இவர்கள் இருவரும், நேற்று காலை, 6 மணிக்கு பைக்கில் பர்கூர் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பங்களா மேடு நான்கு வழி சாலையில், முன்னால் சென்ற மினி லாரி மீது பைக் மோதியது. இதில், சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். நாட்டறாம்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
* திருப்பத்தூர் அடுத்த தோக்கியம் புளியந்தோப்பை சேர்ந்தவர் ராஜசேகர் (27). திருப்பூரில் ஸ்வீட் கடையில் பணிபுரிந்து வந்த அவர், உறவினர் வீட்டு கிரகப்பிரவேஷத்தில் கலந்து கொள்ள, இரு நாட்களுக்கு முன், தோக்கியம் வந்தார். பைக்கில் கெஜல்நாயக்கன்பட்டிக்கு சென்று விட்டு, நேற்று காலை, 11 மணிக்கு தோக்கியம் நோக்கி திரும்பி வரும் போது, செல்லியம்மன் கோவில் அருகே தாயப்பன் நகரை சேர்ந்த முரளி என்பவர் ஓட்டி வந்த பைக் மீது, ராஜசேகர் பை மோதியது. இதில், ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். கந்திலி போலீஸார் விசாரிக்கின்றனர்.