/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது நிச்சயம்விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது நிச்சயம்
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது நிச்சயம்
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது நிச்சயம்
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது நிச்சயம்
ADDED : செப் 06, 2011 10:43 PM
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது நிச்சயமென கல்லூரி டீன் தேன்மொழி தெரிவித்தார்.
முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத் துவக் கல்லூரி டீன் தேன்மொழி கூறியதாவது: கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற் கூறுகையியல், உடற்இயற்பியல், உயிர் வேதியியல் போன்ற பாட பிரிவுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஆய்வக வசதி, விடுதி, நூலக வசதியுடன் கல்லூரி சிறப்பாக செயல்படுகிறது. தற்போது முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு தேவையான நுண்ணுயிரியல், சட்டம் சார்ந்த படிப்பு, மருந்தியல் போன்ற பாடப்பிரிவுகளும், வசதிகளும் உள்ளது. மருத்துவமனை மற்றும் கல்லூரி ஊழியர்கள் தங்க தேவையான குடியிருப்பு வசதிகள் உள்ளது. குடியிருப்புகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக் கும் பணி நடைபெற்று வருகிறது. கல்லூரி கலை அரங்கம் கட்டப்பட்டு உள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ளதால் இங்கு பயிலும் மாண வர்கள் நன்றாக படித்து அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள் என்பது நிச்சயம். இவ்வாறு கல்லூரி டீன் டாக்டர் தேன் மொழி தெரிவித்தார்.