ADDED : ஜூலை 13, 2011 11:58 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கற்பழிப்பு புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சி.ஆர்.பி.எஃப்., போலீஸ் ஏட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார் (29). சி.ஆர்.பி.எஃப்., போலீஸில் ஏட்டாக பணிபுரிந்த இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கந்திகுப்பம் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து கணேஷ்குமார் போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் கணேஷ்குமார் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.அதன் பின் மனமுடைந்து காணப்பட்ட கணேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.


