Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நோபல் பரிசு அறிவிப்பு துவக்கம் : மருத்துவத் துறையில் 3 பேருக்கு பரிசு

நோபல் பரிசு அறிவிப்பு துவக்கம் : மருத்துவத் துறையில் 3 பேருக்கு பரிசு

நோபல் பரிசு அறிவிப்பு துவக்கம் : மருத்துவத் துறையில் 3 பேருக்கு பரிசு

நோபல் பரிசு அறிவிப்பு துவக்கம் : மருத்துவத் துறையில் 3 பேருக்கு பரிசு

ADDED : அக் 03, 2011 11:08 PM


Google News
Latest Tamil News
ஸ்டாக்ஹோம் : இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக, மருத்துவத்திற்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மனித உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்த்ததற்காக, மூன்று பேருக்கு இப்பரிசு வழங்கப்பட உள்ளது.

சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எழுதி வைத்த உயிலின் படி, 1901ம் ஆண்டு முதல், நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என்ற வரிசையில், இந்தப் பரிசுகள் அறிவிக்கப்படும். இதில் முதற்படியாக, மருத்துவத் துறையில், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்திய மூன்று பேருக்கு, இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்கரான ப்ரூஸ் பட்லர், பிரான்ஸ் நாட்டவரான ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடா நாட்டவரான ரால்ப் ஸ்டெயின்மென் ஆகியோர், இப்பரிசை பெறுகின்றனர். பரிசுத் தொகையான 1.5 மில்லியன் டாலர் (ஒரு மில்லியன் - 10 லட்சம்; ஒரு டாலர் - ரூ.45) இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

இத்தகவல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழுவால் அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு புரட்சிகரமான ஆண்டாக இருப்பதால், டுனீஷியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த புரட்சிகளில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு, இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய்தான் டேத்தா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us