ADDED : ஆக 09, 2011 01:23 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் தி.மு.க., மாவட்ட செயலாளர்
பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலையில் முன்பு
தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் பக்கிரிசாமி தலைமையில், முத்துப்பேட்டை
ஒன்றிய செயலாளர் சிவசாமி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் அன்பரசு,
முத்துப்பேட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலைøயில்
100 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து தாலுகா
அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பொய் வழக்கு போடும் போலீஸாரை
கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது.


