/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய கூட்டணிக்கு பா.ம.க., அச்சாரம்புதிய கூட்டணிக்கு பா.ம.க., அச்சாரம்
புதிய கூட்டணிக்கு பா.ம.க., அச்சாரம்
புதிய கூட்டணிக்கு பா.ம.க., அச்சாரம்
புதிய கூட்டணிக்கு பா.ம.க., அச்சாரம்
ADDED : ஆக 05, 2011 04:12 AM
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியை, பா.ம.க., நிர்வாகிகள் திடீரென
சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம், புதுச்சேரியில் நடந்து
முடிந்த சட்டசபை தேர்தலில், காங்.,- தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,
போட்டியிட்டது..
இந்தக் கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்லாமல்,
புதுச்சேரியிலும் தோல்வியைத் தழுவியது.இதற்கிடையில், கடந்த வாரம் நடந்த
பொதுக் குழுவில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவதாக பா.ம.க.,
அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக, புதுச்சேரியிலும் காங்., -
தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற பா.ம.க., ஆயத்தமாகி வருகிறது.
ஆளுங்கட்சியான என்.ஆர். காங்., கட்சியுடன் பா.ம.க., நெருங்கி சென்றுக்
கொண்டுள்ளது. என்.ஆர். காங்., கூட்டணிக்கு அச்சாரமாக, புதுச்சேரி பா.ம.க.,
செயலாளர் அனந்தராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகி கள் முதல்வர்
ரங்கசாமியை நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பா.ம.க.,
நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மதியழகன், சுப்ரமணியன், செல்வராசு, ஜெயபாலன்,
தங்க அறிவழகன், ஞானசேகரன், ரவி, வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பா.ம.க., நிர்வாகிகள் கூறும்போது, 'கட்சியின் நிறுவனர்
அறிவுறுத்தலின்படி ரங்கசாமியை பா.ம.க., நிர்வாகிகள் சந்தித்ததாக
தெரிவித்தனர்.