கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை
கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை
கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை
சென்னை:''பிறப்பு, இறப்பை பதிவு செய்வது போல, பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்,'' என, பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசார அமைப்பு (காசா) கூறியுள்ளது.பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசார அமைப்பான, 'கேம்பைன் எகைன்ஸ்ட் செக்ஸ் செலக்ட்டிவ் அபார்ஷன் (காசா)' சார்பில், தமிழகத்தில், ஆறு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் நிலை மற்றும் காணாமல் போகும் பெண் குழந்தைகள் குறித்த மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இது குறித்து, 'காசா' அமைப்பின் மூத்த நிர்வாகி மீனா சுவாமிநாதன் பேசியதாவது:
இந்நிலை, நாடு முழுவதும் பரவலாகி வருகிறது. இதனால், பெண் வன்முறை அதிகரிக்கும். தேசிய அளவிலான பெண்களின் பங்களிப்பும் குறையும்.ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்ற விருப்பம், பெண் குழந்தை வன்முறை, பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையா என அறிந்து அழிக்கும், 'ஸ்கேன்' முறை போன்றவை, பெண் குழந்தை எண்ணிக்கை குறைவிற்கு காரணம். மேலும், பெண் சிசு கருக்கொலைக்கு எதிரான சட்டம் அமலில் இருந்தாலும், சரியாக நடைமுறைபடுத்தவில்லை என்பதும் முக்கிய காரணம். பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது போல, பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு மீனா சுவாமிநாதன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், 'காசா' அமைப்பு உறுப்பினர்கள், பெண்ணிய உரிமை செயல்பாட்டாளர்கள், குழந்தை உரிமை பாதுகாப்பாளர்கள், மக்கள் தொகை புள்ளிவிவர ஆய்வாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.