/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேச்சு போட்டியில் அரசு பள்ளி வெற்றிபேச்சு போட்டியில் அரசு பள்ளி வெற்றி
பேச்சு போட்டியில் அரசு பள்ளி வெற்றி
பேச்சு போட்டியில் அரசு பள்ளி வெற்றி
பேச்சு போட்டியில் அரசு பள்ளி வெற்றி
ADDED : ஆக 11, 2011 11:22 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி, தம்பு மேல்நிலைப்பள்ளியில், ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தனித்திறன் போட்டிகள் நடந்தன.
போட்டிகளை தம்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணி துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த 17 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரண்டு நாள் போட்டியில் குழு நடனம், ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி- வினா போட்டிகள் இடம் பெற்றன. ஓவியப் போட்டியில், பயனீர் பள்ளி குணசீலன், சுவாமி சிவானந்தா பள்ளி அபினேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பேச்சுப் போட்டியில் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வனிதா, தம்பு மேல்நிலைப்பள்ளி சங்கீதா வெற்றி பெற்றனர். கட்டுரைப் போட்டியில் தம்பு மேல்நிலைப் பள்ளி சுபிஷா, பயனீர் பள்ளி புவனேஸ்வரியும் வெற்றி பெற்றனர். தனி நபர் போட்டியில் தம்பு பள்ளி சங்கமித்ரா, தன்யா மேனன், குணசுந்தரி, வைரவன் வெற்றி பெற்றனர். கிராமிய தனி நடனத்தில் தம்பு மேல்நிலைப்பள்ளி லாவண்யா, நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சிந்து வெற்றி பெற்றனர். பரத நாட்டியத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தை சேர்ந்த சாந்தியும், தம்பு பள்ளியை சேர்ந்த ப்ரீத்தியும் வெற்றி பெற்றனர். குழு நடனத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய பள்ளி முதலிடத்தையும், கிராமிய நடனத்தில் பயனீர் பள்ளியும் முதலிடம் பெற்றன. பரிசளிப்பு விழாவில், தம்பு மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் சித்ரா, கோவை சபர்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் ஆகியோர் பரிசு வழங்கினர். தமிழாசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார்.