/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனுவேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு
வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு
வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு
வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : ஆக 03, 2011 10:16 PM
உளுந்தூர்பேட்டை : எறையூர் பள்ளி அருகே வேகத் தடை அமைக்க எம்.எல்.ஏ.,விடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து குமரகுரு எம்.எல்.ஏ.,விடம் தே.மு.தி.க., ஒன்றிய துணை செயலாளர் எறையூர் ராஜா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பகுதியில் சாலையை கடக்கும்போது பல மாணவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.இதனை தடுக்க திருக்கோவிலூர்-கோட்டை சாலையில் பள்ளி அருகே வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரகுரு எம்.எல்.ஏ.,விடம் தே.மு.தி.க., ஒன்றிய துணை செயலாளர் எறையூர் ராஜா கோரிக்கை மனு அளித்தார்.