/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கால்நடை திட்ட பராமரிப்பு முகாம் துவக்கம்கால்நடை திட்ட பராமரிப்பு முகாம் துவக்கம்
கால்நடை திட்ட பராமரிப்பு முகாம் துவக்கம்
கால்நடை திட்ட பராமரிப்பு முகாம் துவக்கம்
கால்நடை திட்ட பராமரிப்பு முகாம் துவக்கம்
ADDED : ஆக 14, 2011 10:31 PM
உடுமலை : உடுமலை அருகே பள்ளபாளையத்தில், கால்நடை பராமரிப்பு திட்ட முகாமை ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு துவக்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு கிராமப்பகுதிகளில் 130 சிறப்பு முகாம்கள் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான முதல் முகாமை பள்ளபாளையத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு துவக்கி வைத்தார். அவர் பேசும் போது, 'முதல்வர் அறிவித்துள்ள இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தால் கிராம பொருளாதரம் மேம்படும். கால்நடைகளை பராமரிக்க கால்நடை கிளை நிலையங்களில் போதுமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நடமாடும் மருத்துவ குழு உட்பட பல்வேறு திட்டங்களை மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மிகுந்த பயனடைவர்', என்றார். பொள்ளாச்சி எம்.பி.,சுகுமார் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் முத்துகோபால் வரவேற்றார். முகாமில், 1,333 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 320 மாடு மற்றும் 100 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 30 மாடுகளுக்கு செயற்கை முறை சினையூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். நன்றாக பராமரிக்கப்படும் 10 கிடாரி கன்றுகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை குறிச்சிக்கோட்டை கால்நடை மருந்தக டாக்டர் சாயிராபானு, கால்நடை ஆய்வாளர்கள் பெரியசாமி, அப்துல்கலாம், உதவியாளர்கள் பாலு, பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.