/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.சி.சி., மாணவர்கள் கோவிலில் சிரமதான பணிஎன்.சி.சி., மாணவர்கள் கோவிலில் சிரமதான பணி
என்.சி.சி., மாணவர்கள் கோவிலில் சிரமதான பணி
என்.சி.சி., மாணவர்கள் கோவிலில் சிரமதான பணி
என்.சி.சி., மாணவர்கள் கோவிலில் சிரமதான பணி
ADDED : ஜூலை 11, 2011 11:39 PM
கிருமாம்பாக்கம் : தானம்பாளையம் ஐயனாரப்பன் பொற்கால பூரணி கோவிலில் என்.சி.சி., மாணவர்களின் சிரமதான பணி நடந்தது.
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி., சார்பில் தானம்பாளையத்தில் சமூக நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜாராமன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியையொட்டி தானம்பாளையம் ஐயனாரப்பன் பொற்கால பூரணி கோவிலில் சிரமதானப்பணி நடந்தது.
சிரமதானப்பணியில் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜிவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 50 என்.சி.சி., மாணவர்கள் கோவில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர். நிகழ்ச்சியில் தானம்பாளையம் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஞானவேல், கவுன்சிலர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி., திட்ட அதிகாரி கமலன் செய்திருந்தார்.