ADDED : ஜூலை 17, 2011 01:34 AM
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜூ(19).
இவர் கடந்த 14ம் தேதி புதுப்பாளையத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது தனக்கு பிடித்த பாடலை பாடும்படி கேட்டுள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அப்பகுதியின் வார்டு உறுப்பினர் கருணாகரன்(38) மற்றும் அவரது நண்பர்கள் முரளிதரன், இளஞ்செழியன் மூவரும் சேர்ந்து சின்னராஜூவை தடியால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த சின்னராஜூ முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து கருணாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.