ADDED : ஜூலை 25, 2011 10:21 PM
கூடலூர் : தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (38).
மினிலாரி டிரைவர். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (30). இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ரமேசுக்கும், மாரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. உறவினர்களுக்கு இது தெரியவந்தது, அவமான தாங்காமல் லோயர்கேம்ப் அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் எழுதி வைத்த கடிதத்தை லோயர்கேம்ப் போலீசார் கைப்பற்றினர்.