Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தெலுங்கானாவிற்கு உலக அழகிப் போட்டி தேவையா? மாநில காங்., அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

தெலுங்கானாவிற்கு உலக அழகிப் போட்டி தேவையா? மாநில காங்., அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

தெலுங்கானாவிற்கு உலக அழகிப் போட்டி தேவையா? மாநில காங்., அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

தெலுங்கானாவிற்கு உலக அழகிப் போட்டி தேவையா? மாநில காங்., அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

ADDED : மார் 19, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
ஐதராபாத்: ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ரூ.71 ஆயிரம் கோடி நிதி நெருக்கடியில் தெலுங்கானா மாநிலம் தத்தளிக்கும் போது ரூ.200 கோடி செலுத்தி, ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடத்த வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த உலக அழகிப் போட்டி, இந்தாண்டு மே மாதம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், நேற்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள், மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் உண்டாக்கிய வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்காமல், உலக அழகிப் போட்டிக்கு நிதி ஒதுக்குவதா என கண்டனம் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக பாரதிய ராஷ்டரீய சமிதி கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க முடியவில்லை. ஆனால், ரூ.200 கோடி செலவில் அழகிப் போட்டி நடத்துவது அவசியமா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தது.

அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே டி ராமராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகளவில் ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பிம்பத்தை மேம்படுத்த இந்தியாவிற்கு ஒரு மதிப்புமிக்க நிகழ்வை கொண்டு வர அயராது பாடுபட்டோம். அந்த லட்சியத்தின் ஒரு பகுதியாக பார்முலா இ பந்தயம் நடத்தினோம். இதற்காக ரூ.46 கோடி நாங்கள் செலவு செய்தது தவறு. அதற்காக வழக்குப்பதிவு செய்வீர்கள்.

ஆனால், உலக அழகிப் போட்டி நடத்த மக்கள் வரிப்பணத்தில் ரூ.200 கோடி செலவு செய்வது சரி…

இதற்கு என்ன காரணம்? ராகுல் விளக்கம் அளிப்பாரா? எனக்கூறியுள்ளார்.

மேலும் அவர்,

தெலுங்கானாவில் அனைத்தும் நன்றாக உள்ளது என நம்மை நம்ப வைக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. அவர்களின் கூற்றுப்படி, முதலீடுகள் வேகமாகவும், வலுவாகவும் வருகிறது.

விவசாயத்துறை வளர்கிறது.

அதிகளவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

முதல்வர் 18 மணி நேரம் உழைக்கிறார் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அப்படி என்றால், முதல்வர் நேற்று வளர்ச்சி எதிர்மறையில் உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.71 ஆயிரம் கோடி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது ஏன்,

தெலுங்கானா வளர்கிறதா அல்லது வீழ்கிறதா… எனக்கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us