Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ., யார் தெரியுமா

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ., யார் தெரியுமா

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ., யார் தெரியுமா

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ., யார் தெரியுமா

ADDED : மார் 19, 2025 08:49 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ., என்ற பெருமையை மும்பை கட்கோபர் கிழக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ., பரக் ஷா பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3,400 கோடி ஆகும்.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்ற அமைப்பு நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் சொத்து, குற்றவழக்குகள் குறித்த தகவல்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து உள்ளது. நேற்று( மார்ச் 18) குற்ற வழக்குகள் தொடர்பான பட்டியல் வெளியான நிலையில், அடுத்ததாக பணக்கார எம்.எல்.ஏ., யார் என்ற பட்டியலை வெளியாகி உள்ளது. இதற்காக நாடு முழுதும், 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,092 எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 24 எம்.எல்.ஏ.,க்களின் சொத்துப்பட்டியல் குறித்த தகவல்கள் சரியாக கிடைக்கப்பெறவில்லை. ஏழு இடங்கள் காலியாக உள்ளன.

பணக்கார எம்.எல்.ஏ.,க்கள்


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் கட்கோபர் கிழக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ., பாரக் ஷா, ரூ,3400 கோடி மதிப்பு சொத்துடன், இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ, ஆக உள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ரூ.1,413 கோடி மதிப்பு சொத்துடன் 2வது இடத்தில் உள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து,

கர்நாடகா சுயேச்சை எம்.எல்.ஏ., புட்டசுவாமி கவுடா - ரூ.1,267 கோடி

கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.எல்., பிரியா கிருஷ்ணா - ரூ.1,156 கோடி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- ரூ.931 கோடி

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி எம் .எல்.ஏ., நாாரயணா-824 கோடி

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி - ரூ.757 கோடி

ஆந்திராவின் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ., பிரசாந்தி ரெட்டி -ரூ.716 கோடி

குஜராத்தின் பா.ஜ., எம்.எல்.ஏ., ஜெயந்திபாய் சோமபாய் படேல் - ரூ.661 கோடி

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேஷ் - ரூ.648 கோடி

முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில் ஆந்திராவை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதேபோல், முதல் 20 பணக்கார எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில் ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்ட ஏழு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.



ஏழை எம்.எல்.ஏ.,


நாட்டின் குறைந்த சொத்து உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில் முதலிடத்தில்

பீஹாரின் ஆர்ஜேடி கட்சியின் ராம்விர்கிஷ் சதா - ரூ.70,000

திரிபுராவின் திப்ரி மோதா கட்சியை சேர்ந்த நந்திதா ரூ.63,000

ஒடிசாவின் பா.ஜ., எம்.எல்.ஏ., சஞ்சலி முர்மு - ரூ.35,076

உ.பி.,யின் சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அனில்குமார் அனில் பிரதான் - ரூ.30,496

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., சாஹா- ரூ.30,422

காஷ்மீரின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மேக்ராஜ் மாலிக் -ரூ.29,070

பஞ்சாபின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நரிந்தர் கவுர் பாரஜ் - ரூ.24,409

பஞ்சாபின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,நரிந்தர் பால் சிங் சாவ்னா - ரூ.18,370

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ., நிர்மல் குமார் தாரா- ரூ.1,700

ஆகியோர் குறைந்த சொத்துகள் கொண்ட எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.

மொத்த எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு


கர்நாடகாவில் உள்ள 223 எம்.எல்.ஏ.,க்களின் ெமாத்த சொத்து மதிப்பு - ரூ.14,179 கோடி.

மஹாராஷ்டிராவின் 286 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.12,424 கோடி

ஆந்திராவின் 174 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.11,323 கோடி

திரிபுாவின் 60 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.90 கோடி

மணிப்பூரின் 59 எம்.எல்.ஏ.,க்களின் ெமாத்த சொத்து மதிப்பு - ரூ.222 கோடி

புதுச்சேரியின் 30 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.297 கோடி

இந்தியாவின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு ரூ.73,348 கோடி ஆக உள்ளது. இது, 2023- 24 ம் நிதியாண்டில் நாகலாந்து( ரூ.23,086 கோடி), திரிபுரா( ரூ.26,892 கோடி), மேகாலயா( ரூ.22,022 கோடி) மாநில அரசுகள் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டின் மொத்த தொகையை விட அதிகம் ஆகும்.

கட்சி வாரியாக


பா.ஜ.,வின் 1,653 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த மொத்து மதிப்பு - ரூ.26,670 கோடி

காங்கிரசின் 646 எம்.எல்.ஏ.,களின் மொத்த மொத்து மதிப்பு - ரூ.17,357 ேகாடி

தெலுங்கு தேசம் கட்சியின் 134 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு -ரூ.9,108 கோடி

64 சுயேச்சைகளின் சொத்து மதிப்பு - ரூ.2,388 கோடி

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 132 பேரின் சொத்து மதிப்பு - ரூ.1,675 கோடி

சிவசேனாவின் 59 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு - ரூ.1,758 கோடி

தேசிய வாத காங்கிரஸ் 53 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு- ரூ.1,176 கோடி

சமாஜ்வாதியின் 110 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு -ரூ.1110 கோடி

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு -ரூ.1,091 கோடி

பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சியின் 28 எம்.எல்.ஏ.,க்கள் சொத்து மதிப்பு -ரூ.1,031 கோடி

ஆம் ஆத்மியின் 123 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு - ரூ.902 கோடி

அ.தி.மு.க.,வின் 66 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு- ரூ.777 கோடி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 20 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு -ரூ. 690 கோடி

ஆர்ஜேடி கட்சியின் 76 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு- ரூ.454 கோடி

ஐக்கிய ஜனதா தள கட்சியின் 49 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு -ரூ.399 கோடி

மார்க்சிஸ்ட் கட்சியின் 76 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு- ரூ.103 கோடி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us