பயங்கராவத செயல்களுக்கு பின்னணியில் பாக். : சிதம்பரம்
பயங்கராவத செயல்களுக்கு பின்னணியில் பாக். : சிதம்பரம்
பயங்கராவத செயல்களுக்கு பின்னணியில் பாக். : சிதம்பரம்
UPDATED : செப் 15, 2011 12:57 PM
ADDED : செப் 15, 2011 10:09 AM
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு விசாரணையில் சிறிது குழப்பம் உள்ளது.
சூழ்நிலை தற்போது சகஜநிலையில் இல்லை. எனினும் விசாரணையில் இன்னும் தன்னிறைவு பெறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். டில்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சிதம்பரம்: நக்சைல் பிரச்னை நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு மற்றும் மும்பை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு தான் திட்டமிடப்படுகிறது என்றார்.


