
'தனித்துவம் மிக்க கலை கூத்து!'
கூத்துக் கலையை வளர்க்கும் பணியில், 25 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஹேனி டிப்ருவின்: என் சொந்த நாடு நெதர்லாந்து.
கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைப்பதற்காக, 1990ல், 'கட்டைக் கூத்து சங்கம்' உருவானது. கலைஞர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தி, அதன் மூலம் கலையை வளர்ப்பதே இதன் நோக்கம். 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நவீன நாடகங்களையும் அரங்கேற்றி வருகிறோம்.உடை, ஆபரணம் என, அனைத்தும் இங்கேயே தயாராகின்றன. கடந்த, 2002ல், முறையாக கூத்துப் பயிற்சி அளிக்க, 'குருகுலம்' என்ற பட்டறையைத் தொடங்கினேன்.
இதில், பிளஸ் 2 வரையிலான ரெகுலர் பள்ளி, இயங்கி வருகிறது. ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கூத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.கூத்துப் பயிற்சி முடிப்பவர்களைச் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, தொழில் ரீதியாக நிகழ்ச்சிகளில் வாய்ப்பு அளிக்கிறோம். பல வெளிநாட்டு நிகழ்ச்சிகள் இருந்தாலும், ஆடி மாதம் மட்டும், தமிழகக் கோவில்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்!