ADDED : ஆக 26, 2011 12:25 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பகுதியில் ஆயுதத்துடன் சுற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் விக்டோரியா நகர் குழந்தைகள் பூங்கா அருகே ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன், 20, என்ற வாலிபர் வீச்சரிவாளுடன் சுற்றிக் கொண்டிருந்தார். அவரைப் போலீசார் கைது செய்தனர்.