/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வேட்புமனு தாக்கல் பொதுமக்கள் ஆர்வம்வேட்புமனு தாக்கல் பொதுமக்கள் ஆர்வம்
வேட்புமனு தாக்கல் பொதுமக்கள் ஆர்வம்
வேட்புமனு தாக்கல் பொதுமக்கள் ஆர்வம்
வேட்புமனு தாக்கல் பொதுமக்கள் ஆர்வம்
ADDED : செப் 26, 2011 10:41 PM
விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
விழுப்புரம் நகராட்சிக்கு முக்கிய கட்சிகளின் சார்பில் சேர்மன் மற்றும் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று அதிகளவில் வேட் புமனு தாக்கல் செய்தனர். மனுதாக்கல் செய்தவர்களின் பட்டியல் உடனுக்குடன் தகவல் பலகையில் ஒட்டப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் பகுதி வேட்பாளர் யார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். வேட்புமனு தாக்கல் நடந்ததையொட்டி நேற்று காலை முதல் மாலை வரை விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.