240 கிலோ கஞ்சா பறிமுதல்:கம்பத்தில் நான்கு பேர் கைது
240 கிலோ கஞ்சா பறிமுதல்:கம்பத்தில் நான்கு பேர் கைது
240 கிலோ கஞ்சா பறிமுதல்:கம்பத்தில் நான்கு பேர் கைது
ADDED : ஆக 19, 2011 08:38 PM
தேனி: கேரளாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட, 240 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்தனர்.போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், கம்பம் அருகே வாகன தணிக்கையில், போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
கேரளா நோக்கி சென்ற, டயோட்டா குவாலிஸ் காரை சோதனை செய்த போது, காரில் மறைத்து வைத்திருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த, கம்பத்தை சேர்ந்த ராஜா, மலைச்சாமி, சிவமணி, இடுக்கி மாவட்டம், அடிமாலியை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய நால்வரை, கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், க.புதுப்பட்டியில் தென்னந்தோப்புக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.கைதான நான்கு பேரும், உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


