/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மக்கள் தொகை கல்வி குறித்து போஸ்டர் தயாரிக்கும் போட்டிமக்கள் தொகை கல்வி குறித்து போஸ்டர் தயாரிக்கும் போட்டி
மக்கள் தொகை கல்வி குறித்து போஸ்டர் தயாரிக்கும் போட்டி
மக்கள் தொகை கல்வி குறித்து போஸ்டர் தயாரிக்கும் போட்டி
மக்கள் தொகை கல்வி குறித்து போஸ்டர் தயாரிக்கும் போட்டி
ADDED : ஆக 05, 2011 10:02 PM
விருதுநகர்:அரசு பள்ளி மாணவர்களுக்கு மக்கள்தொகை கல்வி குறித்து போஸ்டர்
தயாரிக்கும் போட்டியை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
நடத்துகிறது. அரசு பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு
போஸ்டர்கள் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் தொடர் வளர்ச்சி,
வளர் இளம் பருவக்கல்வி, ஆண், பெண் சமநிலை மற்றும் சமத்துவம், குடும்பம்
ஆகிய தலைப்புகளில் போஸ்டர்கள் தயாரிக்க வேண்டும். இதற்கான போட்டிகள் பள்ளி
அளவில் ஆக.17, மாவட்ட அளவில் ஆக.,19, மாநில அளவில் ஆக.,22 ல் நடத்தப்பட
உள்ளன.
இதன் ஒருங்கிணைப்பாளராக அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன
பேராசிரியரை நியமித்து போட்டிகள் நடத்த வேண்டும். மாநில அளவில் 10
போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்பரிசாக 700, இரண்டாம் பரிசு
500, மூன்றாம் பரிசு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. மற்ற ஏழு பேர்களுக்கு
சான்றுகள் வழங்கப்படும். இதில் முதல் இடம் பிடித்தவர்கள் தேசிய போட்டியில்
பங்கேற்பர்.