உறுப்பினர்கள் கருத்துக்களை சபை குறிப்பில் பதிய நடவடிக்கை: சபாநாயகர் ஜெயக்குமார்
உறுப்பினர்கள் கருத்துக்களை சபை குறிப்பில் பதிய நடவடிக்கை: சபாநாயகர் ஜெயக்குமார்
உறுப்பினர்கள் கருத்துக்களை சபை குறிப்பில் பதிய நடவடிக்கை: சபாநாயகர் ஜெயக்குமார்
ADDED : ஆக 11, 2011 11:06 PM

சென்னை: ''சட்டசபையில் நேரம் இன்மை காரணமாக, உறுப்பினர்கள் பேச நினைத்த கருத்துக்களை பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அக்கருத்துக்களை சட்டசபை குறிப்புகளில் பதிவு செய்ய அனுமதிக்க ÷வண்டும்,'' என, சட்டசபையில் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று, 'உறுப்பினர்களின் கருத்துக்கள், சபை குறிப்புகளில் பதிவு செய்யப்படும்' என, சபாநாயகர் அறிவித்தார்.சட்டசபையில், உறுப்பினர்கள் பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு, தொகுதி பிரச்னைக்கு வரும்போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிடும். இதுபோன்ற நேரத்தில், 'உறுப்பினர்கள் பேச இருந்த ÷காரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்துவிடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்' என, சபாநாயகர் கூறிவிடுகிறார்.ஆனால், சட்டசபையில், தொகுதி பிரச்னைகளை பேச முடியவில்லையே என்ற ஏக்கம் உறுப்பினர்களிடம் இருக்கிறது. இதை உணர்ந்த முதல்வர், நேற்று, 'தொகுதி பிரச்னையை சட்டசபையில் பேசினேன் என்பதை மக்களுக்கு காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உறுப்பினர்களுக்கு இருக்கிறது. ஆனால், ÷நரம் முடிந்துவிட்டது என்று நீங்கள் (சபாநாயகர்) கூறுகிறீர்கள். உறுப்பினர்களுக்கு உள்ள தர்மசங்கடத்தை கருதி, அவர்களின் கோரிக்கைகளை சபைக் குறிப்புகளில் பதிவு செய்ய, நீங்கள் நடவடிக்கை எடுக்க ÷வண்டும்' என்றார்.முதல்வரின் கோரிக்கையை ஏற்று, 'உறுப்பினர்களின் கோரிக்கைகள், சபைக் குறிப்புகளில் பதிவு செய்யப்படும்' என, சபாநாயகர் அறிவித்தார்.