/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வனத்துறை மூலம் இயற்கை உரங்கள் விற்பனைவனத்துறை மூலம் இயற்கை உரங்கள் விற்பனை
வனத்துறை மூலம் இயற்கை உரங்கள் விற்பனை
வனத்துறை மூலம் இயற்கை உரங்கள் விற்பனை
வனத்துறை மூலம் இயற்கை உரங்கள் விற்பனை
ADDED : ஆக 03, 2011 01:27 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட வனத்துறை மூலம் உயிர் உரங்கள் தயார் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மண் வளத்தை பாதுகாக்க வனத்துறை மூலம் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா கண்காட்சி அரங்கிலும் இயற்கை உர விற்பனை நடந்து வருகிறது.ரசாயன உரங்கள் மற்றும் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு மண் வளம் பாதிக்கப்படுகிறது. காற்று, நீர் ஆகியவை மாசு அடைகின்றன. தாவரங்கள் நோய் எதிர்ப்பு திறனை இழந்து மரக்கன்றுகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாட்டினால், நாம் உண்ணும் உணவு பொருட்களில் நஞ்சு தன்மை அதிகரித்து மனிதனுக்கு பல்வேறு நோய்களையும், நோய் எதிர்ப்பு தன்மை குறைவு மற்றும் தாய் பாலில் கூட விஷத்தன்மை ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கிராம பகுதியில் மாட்டு சாணம், வீடுகளில் சேரும் சாம்பல், குப்பை கழிவுகள் ஆகியவற்றை குப்பை தொட்டிகள் அமைத்து சேகரித்து அவற்றை ஆண்டுதோறும் நிலங்களில் இட்டு, நிலத்தை சீர் செய்து விவசாயம் செய்து வந்தனர். தற்போது, இயற்கை உரங்கள் பயன்பாடு குறைந்து விட்டது. மேலும் மாட்டு சாணங்கள் சேகரிப்பும் குறைந்து வருகிறது.விவசாயிகள் காற்று, நீர் மற்றும் நில மாசுவை தவிர்க்கும் வகையில் தர்மபுரி நவீன நாற்றாங்கால் கோட்டத்தில் உயிர் உர உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டு இயற்கை உரங்கள் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.உயிர் உரங்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து கொடுக்கின்றன, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிருக்கு எளிதில் கிடைக்க செய்கிறது. இதனால், மண் வளம் பெருகுவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மண்ணில் நுண்ணுயிர்கள் உற்பத்தியும் பெருக காரணமாகிறது.தர்மபுரி வனத்துறை சார்பில் நுண்ணுயிர் உற்பத்தி மற்றும் ஆய்வு பணி கடந்த 2000ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோமியியம், வேர் உட்பூசணம் போன்ற நுண்ணியர் உரங்களை நோய் எதிர்ப்பு பயிர்களான ட்ரைகோடர்மா விரிடி, சூடோமோனஸ், ப்ளோரசன்ஸ் ஆகியவற்றை தயாரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.* அசோஸ்பைரில்லம்: தாவரங்களின் வளர்ச்சிக்கு தழைச்சத்து, மணி சத்து போன்றவை மிகவும் இன்றியமையாதவை. ரசாயன உர தழை சத்தை பயன்படுத்தும் போது, பாதி அமோனியா வாயு நிலையும், பாதி கøராத நிலையைம் அடைவதால் பயிருக்கு குறைந்த அளவே தழைச்சத்து கிடைக்கும்.இயற்கையில் காற்றில் 80 சதவீதம் தழைச்சத்து உள்ளது.
இவற்றை அசோஸ்பைரில்லாம், லிப்ரோபெரம், அசோஸ்பைரில்லம் பிராசிலேன்சி போன்ற நுண்ணுயிர்கள் கிரகித்து பயிருக்கு எளிதில் கிடைக்க செய்கின்றன.* ரைசோபியம்: இது லெகூம் வகை தாவரங்களில் வேர் முடிச்சுகளில் கூட்டு வாழ்க்கை நடத்தும் நுண்ணுயிர் ஆகும். இதில், பிராடிசோபியம் ஐப்போனிக்கம் போன்ற நுண்ணுயிர்கள் வனப்பயிர்களான வெள்வேல், கருவேல், சிகப்பு சந்தனம், ஈட்டி போன்ற தாவரங்களின் வேர் முடிச்சுகளில் இருந்து காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு எளிதில் கிடைக்கு செய்யும்.* பாஸ்போபக்டீரியா: மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிசத்தை கரைத்து கொடுக்கும் நுண்ணுயிர்களான பேசில்லஸ் மெகாடீரியம், பேசில்லஸ் பாலிமிக்ஸா போன்ற நுண்ணுயிர்கள் பார்மிக் அமிலம், அசிடிக் அமிலம், லாக்டிக் அமிலம் மற்றும் சச்சீனிக் அமிலம் போன்றவை சுரத்து மண்ணில் கரையாத நிலையில் உள்ள ராக்பாஸ்பேட்டை கரைய செய்து பயிருக்கு எளிதில் கிடைக்க செய்கிறது. இதனால், தாவரங்களின் வேர் மற்றும் தண்டு வளர்ச்சி அதிகரிப்பதுடன் இயற்கையில் நோய் எதிர்ப்பு தன்மை பெற்றுத்தருகிறது.வனத்துறை மூலம் மண் புழு உரங்கள் கிலோ 4 ரூõய்க்கும், அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் கிலோ 14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இயற்கை மற்றும் உயரிஞூ உரங்களை வாங்கி மண் வளத்தை பாதுகாக்கலாம். ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா கண்காட்சியில் வனத்துறை அரங்கில் உயிர் உரங்கள் விற்பனைக்கும், காட்சிக்கும், அதன் பயன் குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.