ADDED : ஜூலை 24, 2011 10:37 AM
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதி அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை அமராவதி ஆற்றின் கரையோறப் பகுதியில் உள்ள பாறையில் முதலை இருப்பது கண்டு ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. முதலை நடமாட்டம் குறித்து அப்பகுதி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது