/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மரப்பாலம் சந்திப்பில் மேம்பாலம் பாஸ்கர் எம்.எல்.ஏ., யோசனைமரப்பாலம் சந்திப்பில் மேம்பாலம் பாஸ்கர் எம்.எல்.ஏ., யோசனை
மரப்பாலம் சந்திப்பில் மேம்பாலம் பாஸ்கர் எம்.எல்.ஏ., யோசனை
மரப்பாலம் சந்திப்பில் மேம்பாலம் பாஸ்கர் எம்.எல்.ஏ., யோசனை
மரப்பாலம் சந்திப்பில் மேம்பாலம் பாஸ்கர் எம்.எல்.ஏ., யோசனை
ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : 'மரப்பாலம் சிக்னலில் சாலையை அகலப்படுத்தி மேம்பாலம் அமைக்க வேண்டும்' என, பாஸ்கர் எம்.எல்.ஏ., கூறினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், பாஸ்கர் எம்.எல்.ஏ., எழுப்பிய கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது. பாஸ்கர்: போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள மரப்பாலம் சிக்னல் பகுதியில் பிரதான சாலையை விரிவுப்படுத்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? முதல்வர் ரங்கசாமி: மரப்பாலம் சந்திப்பில் இருந்து முருங்கப்பாக்கம் வரையிலான கடலூர் சாலையை அகலப்படுத்துவதற்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்படும். அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். பாஸ்கர்: மரப்பாலம் சிக்னலில் கூட்ட நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் எண்ணம் அரசுக்கு உண்டா? முதல்வர் ரங்கசாமி: மேம்பாலம் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும். பாஸ்கர்: காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உச்சகட்டமாக உள்ளது. தினமும் 10, 15 விபத்துக்கள் நடக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சுமிநாராயணன்: அது, மரப்பாலம் அல்ல. மரணப்பாலமாக உள்ளது. அந்த சிக்னலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புரு÷ஷாத்தமன்: அரியாங்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும்போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வர வேண்டி உள்ளது. முதல்வர் ரங்கசாமி: இந்த பிரச்னையில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும்.