/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாணவியை கடத்திய வழக்கில் மரக்காணத்தில் ஐந்து பேர் கைதுமாணவியை கடத்திய வழக்கில் மரக்காணத்தில் ஐந்து பேர் கைது
மாணவியை கடத்திய வழக்கில் மரக்காணத்தில் ஐந்து பேர் கைது
மாணவியை கடத்திய வழக்கில் மரக்காணத்தில் ஐந்து பேர் கைது
மாணவியை கடத்திய வழக்கில் மரக்காணத்தில் ஐந்து பேர் கைது
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
மரக்காணம் : மரக்காணத்தை சேர்ந்த பூரணி மகள் திவ்யா,17.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றார். நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு பஸ் நிலையத்தில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அதே பகுதியில் மொபைல்போன் கடை வைத்துள்ள மரக்காணத்தை சேர்ந்த செல்வம்,24 மற்றும் இவரது நண்பர்களான ஆட்டோ டிரைவர் அன்பு, பாலா, சங்கர், முருகன், சுப்பிரமணி சேர்ந்து திவ்யாவை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து அன்பு உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை தேடி வருகின்றனர்.