/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிறப்பு கணக்கெடுப்பு முகாம் : வேளாண் அதிகாரி வேண்டுகோள்சிறப்பு கணக்கெடுப்பு முகாம் : வேளாண் அதிகாரி வேண்டுகோள்
சிறப்பு கணக்கெடுப்பு முகாம் : வேளாண் அதிகாரி வேண்டுகோள்
சிறப்பு கணக்கெடுப்பு முகாம் : வேளாண் அதிகாரி வேண்டுகோள்
சிறப்பு கணக்கெடுப்பு முகாம் : வேளாண் அதிகாரி வேண்டுகோள்
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வட்டார விவசாயிகள் சிறப்பு கணக்கெடுப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென வேளாண்மை துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆழ்வார்குறிச்சி வேளாண்மை அலுவலக துணை வேளாண்மை அலுவலர் தவசி ஆசாரி வட்டார விவசாயிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தமிழக அரசின் சிறப்பு திட்டமாக ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் உள்ள பண்ணை விவசாயிகளுக்கு சிறப்பு கணக்கெடுப்பு முகாம் தற்போது துவங்கியுள்ளது. இம்முகாமில் ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், சிவசைலம், ஆம்பூர், கருத்தப்பிள்ளையூர், கல்யாணிபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, வெள்ளிகுளம், செட்டிகுளம், ராவுத்தபேரி, துப்பாக்குடி, பறும்பு, வாகைக்குளம், வள்ளுவர்நகர் உட்பட சுற்றுவட்டார விவசாயிகளுக்கு உதவி வேளாண்மை இயக்குனர் ராஜசேகரன் அறிவுரையின் பேரில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிறப்பு கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் இந்த முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு தங்கள் வைத்திருக்கும் நிலம், நிலத்தின் பரப்பு, சர்வே எண், தங்களது கல்வி தகுதி, தொலை தொடர்பு எண், தங்கள் வீடுகளில் உள்ள ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தவறாமல் தரவேண்டும். இதன் மூலமாக வரும் அரசு பலன்களை பெற்றுக் கொள்ள இந்த தகவல் உதவும் என்பதால் விவசாயிகள் முழு விபரங்களையும் அளித்து பலன்பெற வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


