ADDED : ஆக 03, 2011 01:03 AM
தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு
விளக்க பிரச்சார கூட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை
வகித்தார்.
மாவட்ட செயலாளர் அகோரம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர்
நடராஜன் வரவேற்றார். துணை செயலாளர் மகாதேவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் வரும் 17,18,19ம் தேதிகளில் கிருஷ்ணகிரியில் நடக்கும்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு குறித்தும், மாநாட்டில் நிறைவேற்றப்பட
கோரிக்கைகளை குறித்தும் அரசு ஊழியர்களிடம் விழிப்புணர்வு
செய்யப்பட்டது.'அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப
வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், மருத்துவ காப்பீடு
திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.


